015 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 வீடுகளை ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியாவுடன் இணைந்து ஜியோஜிட் வழங்கியது

2015 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 வீடுகளை ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியாவுடன் இணைந்து ஜியோஜிட் வழங்கியது

சென்னை, ஏப்ரல் 24: ஜியோஜிட் நிதி சேவை லிமிடெடின் (ஜியோஜிட்) சி.எஸ்.ஆர் பிரிவான ஜியோஜிட் ஃபவுண்டேஷன் ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியாவுடன் இணைந்து 2015 சென்னை பெரு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 வீடுகளைக் கட்டியுள்ளது. இதற்கான சாவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கியது. ஏப்ரல் 21ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் குழிபந்தண்டலம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இல்லத்துக்கான சாவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜியோஜிட் மற்றும் ஹாபிடட் ஃபார் ஹியூமானிட்டி ஏற்பாடு செய்திருந்தது.

விழாவில், ஜியோஜிட் நிர்வாக இயக்குநர் சி.ஜெ.ஜார்ஜ், ஜியோஜிட்டின் நான் எக்ஸிகியூட்டிவ் இன்டிபெண்டெட் டைரக்டர் ராமநாதன் பூபதி, ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியா இயக்குநர் ராஜன் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் புதிய வீட்டுக்கான சாவியைப் பெற்றுக்கொண்ட அமுதா கூறுகையில், "என்னுடைய கணவர் மறைவுக்குப் பிறகு என்னுடைய ஒரே மகன் அஜித்துடன் சிறிய கூரை வீட்டில் வசித்து வந்தேன். அந்த வீட்டை என்னால் அடிக்கடி சரிபார்க்கவும் முடியவில்லை. 2015ல் பெய்த பெருமழை நிலைமையை இன்னும் மோசமாக்கியது. நான் சம்பாதிக்கும் கூலி என்னுடைய குடும்பத்தை நடத்தவே போதுமானதாக இல்லை. இந்தநிலையில், புதிய வீடு என்பது கனவு நிஜமானது போல உள்ளது. ஏனெனில், என்னுடைய சொந்த உழைப்பால் வீடு கட்டும் அளவுக்கு என்னுடைய நிலை இல்லை. எப்போது புதிய வீட்டுக்குக் குடிபெயர்வோம் என்ற மகிழ்ச்சியான மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்" என்றார்.

புதிய வீடுகள் கட்டிக்கொடுத்தது குறித்துச் சி.ஜெ.ஜார்ஜ் கூறுகையில், "மழையால் பாதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். எங்களுடைய குறிக்கோளை ஹேபிடட்டுடன் இணைந்து நிறைவேற்றியுள்ளோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

ஜியோஜிட் நிறுவனம் சென்னை மண்டலத்தில் மட்டும் 40 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதனால், சென்னையின் பெருமழை பாதிப்புகளை நேரில் உணர முடிந்தது. எனவே, ஜியோஜிட் தன்னுடைய சி.எஸ்.ஆர் (பெருநிறுவனங்கள் சமூகக் கடமை) திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதி ஒதுக்கியது.

இது குறித்து ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ராஜன் சாமுவேல் கூறுகையில், "பெருமழை வெள்ளத்தால் ஏழைகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிரந்தரமான, மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாத, உறுதியான இல்லங்களைக் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். தமிழகத்தில் எங்களின் இந்தத் திட்டத்திற்கு ஜியோஜிட் உதவியதற்காக ஜியோஜிட் நிறுவனத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மழை வெள்ளம் ஏற்பட்ட 2015 நவம்பரில் உடனடியாகக் களத்தில் குதித்து உதவி திட்டங்களை வழங்கினோம். கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் தங்கள் வாழ்வை மறுகட்டமைப்புச் செய்துகொள்ளத் தேவையான உதவிகளை நாங்கள் வழங்கியுள்ளோம்" என்றார்.

வீட்டின் சிறப்புக்கள்...

250 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது

ஒரு வரவேற்பு அறை, ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிப்பறை இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு மழை நீர் சேகரிப்பு அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடுகள் இயற்கை பேரிடரைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்தில் இருந்து மூன்று அடி உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. இதனால், வெள்ளநீர் வீட்டுக்குள் வராது.

தண்ணீர் தேங்காத வகையில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின்போதும் கூட இந்த வீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது.

இந்த வீடுகள் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளைப் பெற்றவர்களே, இந்த வீடுகளுக்கு உரிமையாளர்கள்.

 

புகைப்படத்தில்...

ஜியோஜிட் மற்றும் ஹேபிடட் ஃபார் ஹியுமானிட்டி இந்தியா இணைந்து குழிபந்தண்டலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளன. இதற்கான விழாவில், ஜியோஜிட் தலைமை மனித வள மேலாண்மை தலைவர் ஜெயா ஜேக்கப், திருவனந்தபுரம் ஸ்மார்ட் சிட்டி தலைமை செயலாக்க அதிகாரியும், கேரளா தொழில் கட்டமைப்பு மேம்பாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் எம்.பீனா ஐ.எ.எஸ், ஜியோஜிட் நிர்வாக இயக்குநர் சி.ஜெ.ஜார்ஜ், ஹேபிடட் ஃபார் ஹியூமானிட்டி இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜன் சாமுவேல் ஆகியோர் புதிய இல்லத்துக்கான சாவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கியபோது எடுத்த படம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்…

திரு. சுரேஷ்

+91 9840097045